Header Ads



"அல்ஹம்துலில்லாஹ் லகல் ஹம்து வலகஷ்ஷுக்ர்.."


🇦🇪 காஸாவில் உள்ள அல்ஷிபா மருத்துவமனை இஸ்ரேலுடைய தாக்குதலுக்குள்ளான போது அங்கிருந்தவர்கள் உயிர் பிழைக்க ஓடினார்கள்.


அதில் வர்தா ஸ்பெத்தா என்ற பெண்மணியும் ஒருவர்.


🏥 அப்போது இவருடைய குழந்தை அல்ஷிபா மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்தது.


அந்த பிஞ்சு குழந்தையின் கதி என்ன ஆகியிருக்குமோ...?! 


என்ற துக்கத்தோடு நிவாரண முகாமில் தஞ்சமடைந்தார்.


அல்ஷிபா மருத்துவமனை பக்கம் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வந்ததாலும், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும்  இந்தப் பெண்ணால் தனது குழந்தையைப் பற்றிய தகவலை பெற முடியாமல் பரிதவித்தார்.


இப்படியாக நாட்கள் கடந்து நேற்றைய தினம் (21.11.2023) அல்ஷிபா மருத்துவமனைக்குச் சென்றார்.


"அங்கு இன்குபேட்டரில் சில குழந்தைகள் உள்ளன..! உங்கள் குழந்தைகள் உள்ளனவா?! என்று பாருங்கள்."


என அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.


ஆவல் பொங்க இன்குபேட்டர் இருக்கும் அறையில் ஒவ்வொரு குழந்தையாக பார்த்துக் கொண்டே வருகிறார்.


ஒரு இன்குபேட்டரில் பார்க்கிறார்... உற்று கவனிக்கிறார்.


முப்பது நாட்களுக்கு முன்பு பார்த்தது.


அல்ஹம்துலில்லாஹ்...!💖


தனது குழந்தை தான் அது...! என்று உணர்கிறார்.


அப்படியே அள்ளி எடுத்து ஆரத்தழுவுகிறார்.


அல்ஹம்துலில்லாஹ் லகல் ஹம்து வலகஷ்ஷுக்ர்..!


(நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறை வாசித்தது போல இருக்கிறது அல்லவா அன்பர்களே..!  📖)


முஜீபுர்ரஹ்மான் சிராஜி 




No comments

Powered by Blogger.