Header Ads



என்னால் என்ன செய்ய முடியுமோ, அதை செய்வேன் - ஷகீப்


இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் நேற்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் பங்களாதேஷ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.


இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் வெற்றியை விட இலங்கை வீரர் மெத்யூஸிற்கு ‘டைம் அவுட்’ முறையில் கொடுக்கப்பட்ட அவுட்தான் பலராலும் பேசப்பட்டு வருகிறது.


பங்களாதேஷ் கேப்டன் ஷகீப் அல் ஹசன் அந்த அவுட்டிற்கு அப்பீல் செய்தது சரிதான் என ஒரு தரப்பினரும் இல்லை அது ரொம்பவே தவறு என ஒரு தரப்பினரும் பேசி வருகின்றனர்.


‘பங்களாதேஷ் மற்றும் ஷகீப் அல் ஹசன் இவர்களை தவிர வேறெந்த அணியும் வேறெந்த வீரரும் இப்படி ஒரு அவமானமான செயலை செய்திருக்கமாட்டார்கள்.’ என மெத்யூஸூம் தனது அதிருப்தியை கடுமையாக வெளிப்படுத்தியிருந்தார்.


இந்நிலையில் இதுகுறித்து பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகீப் அல் ஹசன்,

“ எங்கள் அணி வீரர் ஒருவர் என்னிடம் வந்து கொடுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேட்ஸ்மேன் நேரத்தை எடுத்துக் கொண்டார். எனவே அம்பயரிடம் முறையிடுங்கள் இது அவுட்தான் என்று கூறினார். அதன்பிறகே நானும் அம்பயரிடம் சென்று இதைச் சொன்னேன்.


அந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேனா அல்லது முடிவை திரும்ப பெற்றுக் கொள்கிறேனா என என்னிடம் நடுவர்கள் கேட்டார்கள். இந்த வகை அவுட் கிரிக்கெட் விதிகளில் உள்ளது. அது சரியா, தவறா என்று எல்லாம் எனக்கு தெரியவில்லை. இது போர் மாதிரி. அதில் அணியின் வெற்றிக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன்.


அணியின் வெற்றிக்காகத்தான் நான் அந்த முடிவை எடுக்க வேண்டி இருந்தது. இது குறித்த விவாதங்கள் இருக்கும். ஆனால், அது விதிகளில் உள்ளது. அதனால் அந்த வாய்ப்பினை பயன்படுத்தியதில் எனக்கு கவலையில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

No comments

Powered by Blogger.