ஓமானின் சுதந்திர தினத்தில், அமீர் அஜ்வத் எழுதிய நூல் அதீதிகளுக்கு கையளிப்பு
இந்நிகழ்வின் போது இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளரும் ஓமான் நாட்டுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான சட்டமுதுமாணி ஓ.எல். அமீர் அஜ்வத் எழுதிய “இலங்கை-ஓமான் உறவுகள்: நேற்று, இன்று, நாளை” என்ற இருதரப்பு உறவுகள் பற்றிய நூல் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் விருந்தினர்களுக்கும் இலங்கைக்கான ஓமான் நாட்டுத் தூதுவர் அஹ்மத் அல்றஷ்தி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
“இலங்கை-ஓமான் உறவுகள்: நேற்று, இன்று, நாளை” என்ற இந்நூலுக்கான முன்னுரையை ஓமான் நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் செய்யித் பத்ர் அல்புசைதி எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கும் ஓமானுக்குமிடையிலான வரலாற்றுத் தொடர்புகளை ஆராயும் இந்நூல் இருநாடுகளுக்குமிடையிலான கூட்டுறவை வலுப்படுத்தச் சாதகமான பல்வேறு துறைகளை பட்டியலிட்டுள்ளது.
Post a Comment