இலங்கையின் யானை மணிலாவில் உயிர்துறந்தது - காரசாரமான அறிக்கை வெளியாகியது
மாலி தனது 40 களின் இறுதியில் இருந்த்கதத நம்பப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மணிலா மேயர் ஹனி லகுனாவால் வெளியிடப்பட்ட முகநூல் வீடியோவில் மாலியின் மரணம் அறிவிக்கப்பட்டது,
சமூக ஊடகங்களில் பலர் மாலியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர், மேலும் வைத்தியர் ஜேன் குடோல் மற்றும் போல் மெக்கார்ட்னி உட்பட பல ஆர்வலர்கள், விலங்கு உயிருடன் இருக்கும் போதே அதை யானை சரணாலயத்திற்கு மாற்றியிருக்க வேண்டுமென அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
பிபிசியின் அறிக்கையின் படி, மாலி தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனியாக வாழ்ந்துள்ளதுடன், 1981 இல் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த ஆசிய யானை கடந்த வெள்ளியன்று தனது தும்பிக்கையை சுவரில் தேய்த்ததாகவும் அது வலியின் அறிகுறி எனவும் தலைமை கால்நடை மருத்துவர் ஹென்ரிச் பேட்ரிக் பெனா-டோமிங்கோ தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க் கிழமை காலை, மாலி தன் பக்கவாட்டில் படுத்துக்கொண்டு மூச்சுத் திணறிக் கொண்டிருந்ததுடன் கால்நடை மருத்துவர்களால் மருந்துகள் கொடுக்கப்பட்ட போதிலும், பெண் யானையான மாலி பிற்பகலில் இறந்துவிட்டாள்.
பிரேத பரிசோதனையில் அவரது பெருநாடியில் அடைப்பு மற்றும் சில உறுப்புகளில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
பிலிப்பைன்ஸின் அப்போதைய முதல் பெண்மணி இமெல்டா மார்கோஸுக்கு இலங்கை அரசாங்கம் பரிசளித்த பின்னர் மாலி இலங்கையிலிருந்து மணிலா மிருகக்காட்சிசாலைக்கு சென்றுள்ளது.
மாலி 1990 இல் இறந்த ஷிபா என்ற மற்றொரு யானையுடன் வாழ்ந்த போதிலும், ஷிபா இறந்ததிலிருந்து தனியாகவே வாழ்ந்துள்ளது.
இந்த விலங்கு இறந்தது குறித்து பீட்டா புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
“பீட்டா தொடர்ச்சியாக எச்சரித்த போதிலும், மணிலா மிருகக்காட்சிசாலை மற்றும் நகர அதிகாரிகள் மாலியின் வலிமிகுந்த கால் பிரச்சனைகளைப் புறக்கணித்தனர், இது சிறைப்பிடிக்கப்பட்ட யானைகளின் மரணத்திற்கு முக்கிய காரணமாகும். அவரது கால்நடை பராமரிப்பை மறுத்த மற்றும் சரணாலயத்திற்கு மாற்றுவதைத் தடுத்த ஒவ்வொரு நபரும் பொறுப்புக்கூறப்பட வேண்டும், ”என்று அறிக்கை தெரிவிக்கிறது.
Post a Comment