Header Ads



கெட் அவுட் நெதன்யாஹூ


காஸாவில் நான்கு நாள் போர்நிறுத்தம் நடைபெற்றதையடுத்து பிணைக்கைதிகளை வெளிவிட ஹமாஸ்-இஸ்ரேல் இருதரப்பும் ஒப்பந்தம் செய்துகொண்ட நிலையில்.... ஹமாஸ் விடுதலையாக்கிய பிணைக்கைதிகள் யாரும் நெதன்யாஹூ விடுத்த சந்திப்பு அழைப்பினை ஏற்க மறுத்து வருகின்றனர்.


சொரொக்கோ மருத்துவமனையில் இருக்கும் 82 வயது எல்மா ஆவ்ராம் , நெதன்யாஹூவை சந்திக்க விருப்பமில்லை, அவருடன் பேச எதுவுமில்லை நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன் எனக்கூறி மறுப்புத் தெரிவித்தவுடன் அவருடன் பிணைக்கைதியாக இருந்து வெளிவந்த கப்புட்ஸ் கிராமத்து (குடியிருப்பு) மக்கள் யாரும் நெதன்யாஹூவை சந்திக்க விரும்பவில்லை எனக்கூறி அவரது அழைப்பினை புறக்கணித்துள்ளனர். 


சில நாட்களுக்கு முன் , X தளத்தின் தலைவர் எலோன் மாஸ்க்கை அழைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய சேதங்களை பாருங்கள் என நெதன்யாஹூவும் அவரது சகாக்களும் நடத்திய நாடகத்தை உலகமே காரித்துப்பியது. தன் பக்கத்து குற்றங்களை ஒளித்து வைத்துவிட்டு, ஏதோ ஹமாஸ் திடீரென உருவாகி இவர்கள் மீது தீவிரவாத தாக்குதல்களை நடத்தியபோது போல சித்தரித்து,  ஊரின் கண்ணுக்கு மண்ணைத்தூவ நினைத்த நெதன்யாஹூ இன்று சொந்த இன மக்களாலேயே அவமானத்தை சந்தித்து வருகிறார்.


Rosy S Nasrath

No comments

Powered by Blogger.