Header Ads



தனது பதவி பறிபோனது பற்றி ரொஷான் வெளிப்படுத்திய விடயங்கள்


ஊழல் மோசடிகளை தடுக்க முற்சித்த காரணத்தினால் பதவி பறிபோனது என நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் இன்றைய -28- தினம் சிறப்புரிமை கேள்வி ஒன்றை எழுப்பியதன் மூலம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதியினால் எழுப்பப்பட்ட இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அவர் இதன்போது  தெரிவித்துள்ளார்.


நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தால் அவரை சந்திப்பதில் என்ன தவறு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


மகாவலி காணிகளை தமக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுக்க முயற்சிக்கவில்லை,  அமைச்சரவையில் பேசப்பட்ட விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன.


விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது மக்கள் இந்தப் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பார்கள் என ரொஷான்  ரணசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments

Powered by Blogger.