போதும், போதும் சகோதரர்களே போதும்...!”
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டை முடிவுக்கு வர வேண்டும் என்று போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
"ஆயுதங்கள் அமைதியாக இருக்கட்டும், அவை ஒருபோதும் அமைதியைக் கொண்டுவராது, மோதல் பரவாமல் இருக்கட்டும். போதும், போதும் சகோதரர்களே போதும்!” வத்திக்கானில் பிரார்த்தனையில் ஈடுபட்ட போது அவர் கூறினார்.
காஸாவில் காயமடைந்தவர்களுக்கு உதவ வேண்டும் என்றும், முற்றுகையிடப்பட்ட பகுதிக்கு மேலும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப வேண்டும் என்றும் போப் கூறினார்.
ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"ஒவ்வொரு மனிதனும், கிறிஸ்தவர், யூதர், முஸ்லீம் அல்லது எந்த மதமாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் புனிதமானவர்கள், கடவுளின் பார்வையில் விலைமதிப்பற்றவர்கள், நிம்மதியாக வாழ உரிமை உண்டு" என்று அவர் கூறினார்.
Post a Comment