மனிதாபிமான உதவிக்கு தயாராகிறது சுவிஸ்
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் மத்திய கிழக்கிற்கு 90 மில்லியன் சுவிஸ் பிராங்குகளின் ($99m) மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை வழங்க சுவிஸ் அரசாங்கம் பாராளுமன்றத்திடம் கூடுதல் நிதி கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"மத்திய கிழக்கில் ஆயுத மோதலின் மனிதாபிமான விளைவுகள் இஸ்ரேலிலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலும் மற்றும் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளிலும் மோசமாக உள்ளன" என்று சுவிஸ் பெடரல் கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிதி முக்கியமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை இயக்கம், ஐ.நா மற்றும் பிராந்தியத்தில் உள்ள சர்வதேச மனிதாபிமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குச் செல்லும்.
Post a Comment