Header Ads



ராஜபக்சர்களை பொருளாதார படுகொலையாளிகள் என தீர்ப்பு வழங்கிய நீதியரசர் யார் தெரியுமா..?


 பொருளாதார படுகொலையாளிகளை நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது, இந்த குற்றத்தை தேச துரோக செயற்பாடாக கருத வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று (21) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


மேற்படி விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,


“2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல முன்மொழிவுகளை அதிபர் முன்வைத்துள்ளார். இந்த முன்மொழிவுகள் வெற்றிப்பெற்றால் மக்களுக்கு நன்மை பயக்கும்.


2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் அதிபர் இவ்வாறான பல முன்மொழிவுகளை வழங்கினால் ஆனால் அந்த முன்மொழிவுகள் ஏதும் செயற்படுத்தபடவில்லை.


அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களை இலக்காக கொண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தேர்தல் ஒன்று இடம்பெறுமாக இருந்தால் இவ்வாறான வாக்குறுதிகளை முன்வைக்கலாம்.


பொருளாதார பாதிப்பினால் சமூக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரடைந்துள்ளன. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.


முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நான் இரண்டரை வருடங்கள் சிறையில் இருந்தேன். அப்போது எனக்கு எதிராக நீதிமன்றத்தில் முன்னிலையான அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரால் 'எனது மருமகனின் வியாபாரம் தொடர்பில் நான் அறிந்திருக்க வேண்டும் ' என்று குறிப்பிட்டார்.


அவருக்கு அக்காலப்பகுதியில் உயர்நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இவர் தான் தற்போது ராஜபக்சர்களை பொருளாதார படுகொலையாளிகள் என்று அடையாளப்படுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.