சடலத்திடம் மன்னிப்பு கேட்ட அதிபர் - தன் பாடசாலையின் பாதுகாப்பின்மை குறித்து நாட்டுக்கே கற்பித்த சிறுமி
நேற்று முன்தினம் குறித்த மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாடசாலை அதிபர் மண்டியிட்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியதுடன் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த மாணவியின் வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கிராம மக்கள் தாக்கியதில் அதிபரின் வலது கண் சேதமடைந்துள்ளதுடன், கண்ணில் ப்லாஸ்டர் காணப்பட்டது.
கண்ணீருடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதிபர்,
பாடசாலையின் 3 மாடிக் கட்டிடத்தின் பாதுகாப்பற்ற கூரை ஓடுகள் உடைந்து கிடப்பதைப் பார்த்த போது தண்ணீர் குழாய் அமைப்பின் பாதுகாப்பின்மையை நான் காணவில்லை.
வாரம் இருமுறை கழுவி சுத்தம் செய்கிறேன். மாணவியின் உயிரைக் காக்க முடியவில்லை என்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவை நமது தவறுகள். தயவுசெய்து என்னை மன்னியுங்கள் என அவர் கண்ணீருடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனது பாடசாலையின் பாதுகாப்பின்மை குறித்து நாட்டுக்கே பாடம் கற்பித்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
Post a Comment