கடலை, பாசிப்பயறு விலை குறைப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இரண்டின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இந்த விலைக் குறைப்பு வியாழக்கிழமை (02) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 540 ரூபாவாகும். மேலும், பாசிப்பயறு ஒரு கிலோகிராம் விலை 77 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 998 ரூபாவாகும்.
Post a Comment