Header Ads



முஸ்லிமென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்


இமாம் பகரிப்னு அப்துல்லாஹ் அல்முஜ்னி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்:


உன்னை விட வயதில் மூத்தவர்களை கண்டால், 'இவர் என்னைவிட ஈமானிலும் நல்லமல்கள் புரிவதிலும் முந்திக்கொண்டார் எனவே,  இவர் என்னை விட சிறந்தவர்' என நினைத்துக் கொள்.


உன்னை விட வயதில் குறைந்தவர்களைக் கண்டால், 'பாவங்கள் புரிவதிலும், குற்றங்கள் செய்வதிலும் இவரை விட நான் முந்திக்கொண்டேன்,  எனவே இவர் என்னைவிட சிறந்தவர்' என நினைத்துக் கொள்


உன்னுடைய சகோதர்கள் உன்னை கண்ணியப்படுத்தினால், சிறப்பு செய்தால் அது அவர்களின் பெருந்தன்மை என நினைத்துக் கொள்.


உன்னிடம் அவர்கள் நடந்து கொள்வதில் ஏதேனும் குறைகளைக் கண்டால், இதற்கு நான் செய்த பாவம்தான் காரணம் என நினைத்துக் கொள்.


ஒரு முறை ஜுமுஆ குத்பாவில் ஹஜரத் அமீருல்முஃமினீன் உமர் (ரழி) அவர்கள் சொன்னார்கள்:


முஃமினீன்களே பணிவுடன் இருங்கள், யார் ஒருவர் அல்லாஹ்விற்காக தன்னை இப்படித் தாழ்த்திக்கொள்கிறானோ (அப்பொழுது தனது உள்ளங்கையை தரையின்  பக்கம் திருப்பி கையை கீழே தாழ்த்தினார்கள்) அவரை அல்லாஹ் இப்படி உயர்த்துவான் (அப்பொழுது உள்ளங்கையை வானத்தின் பக்கம் திருப்பி கையை மேலே உயர்த்தினார்கள்.)


   நூல்:அஹ்மது

 ------தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ

No comments

Powered by Blogger.