நாய்க்குட்டிக்குக் கூட சேதம் இல்லை, உயர்ந்த பண்பாடுகளை உலகிற்கு சொன்ன ஹமாஸ்
நகரத்தின் மத்தியில், பொதுமக்கள் முன்னிலையில் தக்பீர் முழக்கத்தோடு கைதிகளை சுமந்து கொண்டு போராளிகள் வந்திரங்கியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
கைதிகள் அனைவரும் பத்திரமாக செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களும் மகிழ்ச்சியோடு பிரியா விடை பெற்றுச் சென்றதை காணொளியில் காண முடிந்தது.
அவர்களின் கைவசம் இருந்த நாய்க்குட்டிகளுக்குக் கூட எந்த சேதாரமும் இன்றி அவை பத்திரமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கம்போல் இந்த முறையும் கைதிகளோடு ஏராளமான ஹமாஸின் பெண் போராளிகளும் வந்திறங்கினர்.
ஹமாஸிடம் இருந்த பணயக் கைதிகள் விடுதலையான பின்னர் "நன்றி சொல்லி கடிதம்" எழுதுகின்றனர்; ஆனால் இஸ்ரேல் சிறையில் இருந்து வந்த பாலஸ்தீன கைதிகள் அங்கு நடந்த கொடுமைகளையும், சித்திரவதைகளையும் விவரிக்கின்றனர். இரண்டுக்கும் மத்தியில் உள்ள வித்தியாசத்தை உலகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.
சென்ற முறை பெண் பணயக் கைதி ஒருவர் குறிப்பிடும்போது, "எங்களை அவர்கள் நன்றாக பார்த்துக் கொண்டனர். எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. எங்களை கவனிப்பதற்கென்று பெண்களும் இருந்தனர். பெண்கள் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும்; தூய்மையைப் பேண வேண்டும் என்பதை நாங்கள் இங்கிருந்துதான் கற்றுக் கொண்டோம்" என்றனர்.
பனைய கைதிகள் பரிமாற்றத்தின் வழியாக போராளிகள், நாங்கள் போர் நெறிகளை மீறவில்லை என்பதையும், தாங்கள் பின்பற்றும் உயர்ந்த பண்பாடுகளையும் இன்றைய நவீன உலகிற்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே
💙
அல்லாஹு அக்பர் வலிலாஹ இல்ல ஹம்து
samanilai samudhayam
Post a Comment