லிப்டில் சிக்கிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் அவரது இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கண்டி மாவட்ட செயலக மின்தூக்கியில் நேற்று சுமார் 30 நிமிடம் சிக்கிக்கொண்டனர்.
கண்டி மாவட்ட செயலக கட்டிடத்தில் உள்ள கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் சென்று கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்தூக்கி திடீரென வேலை செய்யவில்லை. செயலகத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிகுந்த பிரயத்தனத்துடன் அவர்களை வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.
கண்டி மாவட்ட செயலகத்தின் இரண்டாவது மாடியிலுள்ள ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்திற்குச் சென்ற போதே இந்த அவல நிலையை எதிர்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மின்தூக்கி செயலிழந்த போது அவசர அறிவித்தல் பொத்தான் வேலை செய்யாததால் தானும் ஏனைய மக்களும் அநாதரவான நிலையில் இருந்ததாகவும் கண்டி மாவட்ட செயலாளருக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
Post a Comment