ஏற்றுமதிக்காக நாட்டில் ஸ்டோபெரி - அமைச்சரவை அனுமதி
ஏற்றுமதிக்காக ஸ்டோபெரிகளை பயிரிடுவதற்கு உள்நாட்டு முதலீட்டாளர்களால் முன்னதாக கோரப்பட்டிருந்தது.
இதற்கமைய முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த திட்டத்திற்கு முதற்கட்ட நடவடிக்கையாக நுவரெலியாவில் விவசாய அமைச்சுக்கு சொந்தமான ஒரு ஹெக்டயர் காணியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் வெற்றியடைந்தால் ஸ்டோபெரி பயிர்ச்செய்கைக்காக 10 ஹெக்டயர் வரையான காணியை வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஸ்டோபெரி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 57 ஆவது இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்டோபெரிகளை பயிரிட்டால் ஒரு ஹெக்டயர் காணியில் இருந்து வருடத்துக்கு ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 600 அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்ட முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment