Header Ads



வீட்டிலிருந்த சமலிடம் சென்று பணம் கேட்ட நபர் - எதற்காகத் தெரியுமா..?


மின் கட்டணம் செலுத்த பணம் இல்லை என தெரிவித்து நபர் ஒருவர் என்னிடம் பணம் கேட்டார்.  என்னிடம் இருந்த பணத்தைக் கொடுத்து அனுப்பினேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 


ஹம்பாந்தோட்டை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து  கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


மின் கட்டணம் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. நீர்க்கட்டணம் 5000 ரூபாவாக அதிகரிக்கும் போது நீரை துண்டித்து விட்டுச் செல்கின்றனர்.  மின் இணைப்பினை துண்டிக்கின்றனர். கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை.  


நான் வீட்டில் இருக்கும் போது ஒருவர் மின் கட்டணம் செலுத்துவதற்காக 18ஆயிரம் ரூபா பணம் என்னிடம் கேட்டார். மகிந்த ராஜபக்ச அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கியுள்ளார்.  தற்போது மின் கட்டணம் செலுத்த முடியாமல் உள்ளது. 


அந்த நபர் 18ஆயிரம் ரூபா செலுத்த முடியாமல் உள்ளது என தெரிவித்து என்னிடம் பணம் கேட்டார். நான் எப்படி வழங்க முடியும்.  என் கையில் இருந்த சிறிய தொகையை வழங்கி அனுப்பினேன். இதுதான் இன்றைய நிலை என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.