கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவரின் விடயம் பாரதூரமானது
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில், 2019 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க விளையாட்டுடன் தொடர்புடைய தவறுகளைத் தடுக்கும் சட்டத்தின் படி முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு விளையாட்டு குற்றங்களைத் தடுக்கும் புலனாய்வுப் பிரிவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க கடந்த 13ஆம் திகதி ஊடங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
பிரமோதய விக்ரமசிங்கவின் வௌியிட்ட கருத்தின் படி, ஆட்ட நிர்ணயம், ஊழல், சட்டவிரோத செயற்பாடு மற்றும் சட்டவிரோத பந்தயம் குறித்து தனக்குத் தெரியும் என தெரிவித்துள்ளமை பாரதூரமானது என விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment