Header Ads



குறிப்பிட்ட நேரத்தில் பலகோடி ரூபாய் சேர்ந்தது - காஸா மக்களுக்காக நிதி திரட்டும் பணி


பலஸ்தீனின் காஸா மக்களின் துயர் துடைக்க அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய  உதவும் வகையில் நிதி திரட்டும் பணி மன்னர் ஸல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் ஸல்மான் ஆகியோரின் உத்தரவுக்கிணங்க மன்னர் ஸல்மான் நிவாரண மற்றும் மனிதநேய உதவிகளுக்கான மையத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


"ஸாஹிம்" என்ற விசேட செயலியின் ஊடாக அனைவரின் அன்பளிப்புக்களையும் பெற இருக்கும் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த மன்னர் ஸல்மான் நிவாரண மற்றும் மனிதநேய உதவிகள் மையத்தின் பொது முகாமையாளர் கலாநிதி. அப்துள்ளாஹ் ரபீஆ மன்னர் ஸல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் ஸல்மான் ஆகியோருக்கு இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கான உத்தரவு, வழிகாட்டல்களை வழங்கிமைக்காக நன்றியையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொண்டார். 


இன்று பலஸ்தீன முஸ்லிம்களின் துயர்துடைப்பதற்காக ஸவுதியில் ஆரம்பமான மக்கள் நன்கொடைகளைப் பெரும் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது ஸவுதி உலமாக்கள் பேரவையும் இதில் அனைவரையும் பங்களிப்புச்செய்ய தூண்டியதன் விளைவாக இதுவரை 12கோடி 82இலட்சம் ரியால்கள் நன்கொடையாக சேர்ந்துள்ளது 


இதில் 2இலட்ச்சத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை தங்களின் பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.

No comments

Powered by Blogger.