காசாவில் இஸ்ரேல் தோல்வி, ஆதாரங்களை அடுக்கும் ஹமாஸ்
பெய்ரூட்டில் இருந்து பேசிய ஹமாஸின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒசாமா ஹம்டன், காஸாவில் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இஸ்ரேல் "மோசமாகத் தோல்வியடைந்துள்ளது" என்கிறார்.
இஸ்ரேல் அதன் எந்த நோக்கத்தையும் அடையவில்லை, தரைவழி ஊடுருவலில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை இஸ்ரேலால் வெளியிடப்பட்ட எண்ணிக்கையை விட அதிகம் என்று அவர் கூறினார்.
1000 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்துள்ளனர், அவர்களில் 200 பேர் படுகாயமடைந்துள்ளனர், 300 பேர் மிதமான காயமடைந்துள்ளனர்.
வரும் நாட்களில் "எதிரிகளின் இழப்புகள்" அதிகரிக்கும் என்று ஹம்தான் கூறினார். இஸ்ரேலிய துருப்புக்கள் காசாவில் 80 சதவீத நிலத்தை தொடவில்லை என்றும் அவர் கூறினார்.
Post a Comment