Header Ads



எப்படி விசயம் கசிந்தது..? குழம்பிப் போயுள்ள அமைச்சுர்


சீனி மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு குறித்த பிரேரணை அமைச்சரவைக்கு முன்வைக்கப்படுவதற்கு முன்னரே வர்த்தகர்களுக்கு எவ்வாறு தகவல் கிடைத்தது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கேட்டுள்ளார்.


இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வரி திருத்தம் தொடர்பில் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு மாத்திரமே தெரியும் எனக் கூறினார்.

 

மேலும், வரி உயர்வு குறித்து எந்த தரப்பினருக்குத் தெரிந்திருந்த து எனவும் வெளியாட்களுக்கு தகவல் எவ்வாறு தெரிய வந்த து என்பதை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


“சீனி மோசடி குறித்து அன்று குரல் எழுப்பினோம், இன்றும் மோசடி நடந்தால் குரல் எழுப்புவோம், மோசடி நடந்தாலும், தவறு நடந்தாலும் வாயை மூடிக்கொண்டு இருக்க மாட்டோம், இந்த விடயத்தில் என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும்.


வரி அதிகரிப்பு முடிவு குறித்த தகவல் வர்த்தகர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதுதான் இங்கு உண்மையான பிரச்சினை. உண்மையைச் சொல்வதென்றால், வரியை உயர்த்தும் முடிவை அமைச்சரவை உறுப்பினர்கள் கூட அறிந்திருக்கவில்லை.                                                                                                                                

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இது தெரியும், இந்த தகவல் அந்த தொழிலதிபர்களுக்கு எப்படி கசிந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.


“அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவதற்கான அமைச்சரவை முடிவு கூட கசிந்து, அதைத் தொடர்ந்து சம்பளத்தை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டங்களை நடாத்தி, அவர்களின் கோரிக்கைகள் சம்பள உயர்வுக்கு வழிவகுத்தது என்ற தோற்றத்தை ஏற்படுத்தினர்.


மேலும் அரசாங்கம் வரி விதிக்க தீர்மானித்தமவுடன், சில வர்த்தகர்கள் அந்த பொருட்களை உடனடியாக இறக்குமதி செய்கிறார்கள். அரசாங்கம் வரிகளை குறைக்க முடிவு செய்யும் போது, ​​அதே குழு அந்த குறிப்பிட்ட பொருட்களை பதுக்குகிறது. 


இந்தத் தகவல் அந்தத் தொழிலதிபர்களை எப்படிச் சென்றடைகிறது என்பதுதான் நாம் விடை காண வேண்டிய கேள்வி. அமைச்சரவையில் இருந்து எந்த தகவலும் கசிந்துவிடாது என்பதில் உறுதியாக உள்ளேன்" என்று கூறிய அமைச்சர்,

 

"இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். வரிகளில் ஏற்படும் மாற்றங்களால் எப்போதும் இலாபம் பெறும் ஒரு குழு உள்ளது. அதனால்தான் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை ஜனாதிபதி நிர்ணயித்தார். அந்த முடிவினால் இந்த வரி அதிகரிப்பின் மூலம் இலாபம் ஈட்ட முடியாது” என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.