Header Ads



இலங்கையில் முதன்முதலாக அறிமுகம்


இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, தனது விவசாயப் பிரிவான DIMO Agribusinesses மூலம் இலங்கையில் முதலாவது (Bison Boat Tractor) படகு வகை உழவு இயந்திரமான Bison ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.


பைசன் போட் உழவு இயந்திரமானது, எந்தவொரு வயலுக்கும் ஏற்ற உழவு இயந்திரமாக தனித்து நிற்கிறது. இந்த படகு இயந்திரத்தை ஏனையவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது, ஆழமாக உழக் கூடிய அதன் திறன் ஆகும். வழக்கமாக நிலத்தை பண்படுத்தும் முறைகள் மூலம் பண்படுத்த முடியாத சதுப்பு நிலங்களுக்கு ஏற்றதாக இது காணப்படுகிறது.


இந்த புத்தாக்க கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் குறித்து கருத்துத் தெரிவித்த, DIMO குழுமத்தின் விவசாய இயந்திரப் பிரிவை மேற்பார்வை செய்யும் DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே, “பைசன் போட் உழவு இயந்திரமானது, நாட்டில் விவசாய இயந்திரமயமாக்கல் செயற்பாட்டை மேம்படுத்தும் வகையிலான DIMO நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாகும். இந்த சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்பானது, விவசாய சமூகத்தின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், நாட்டின் பயிர்ச் செய்கை முறைகளை மீள்வரையறை செய்யும்.” என்றார்.


No comments

Powered by Blogger.