இஸ்ரேலிய அதிகாரிகள் இலங்கைக்கு திட்டவட்டமாக கூறிய விடயம்
இஸ்ரேலில் பராமரிப்பாளர்களாக பணிபுரிவதற்காக இலங்கை பிரஜைகளை ஆட்சேர்ப்பு செய்யும் செயல்பாட்டில் மேலதிக கட்டணங்களை அறிவிடுதல் உள்ளிட்ட எந்தவித இடைத்தரகர்கள் தலையீடும் இருக்கக்கூடாது என, இஸ்ரேலிய அதிகாரிகள் இலங்கைக்கு திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக அறிய கிடைக்கின்றது.
வேலை தேடும் இலங்கையர்களிடம் பல்வேறு வழிகள் மூலம் இடைத்தரகர்கள் மேலதிக பணம் பெறுவதாக அண்மையில் செய்தி வெளியாகி இருந்தது.
இதேவேளை, மத்திய ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் பணியாளர்களை அனுப்பும் போட்டி நடவடிக்கையின் காரணமாக ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துமாறு இஸ்ரேல், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Post a Comment