Header Ads



நழுவிச் சென்ற நாமல்

வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படாத காரணத்தினால் தான் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் தவிர்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.


மக்களுக்கான நிவாரணத்திற்காக தாம் நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் நல்ல மற்றும் கெட்ட அம்சங்களைக் கொண்டிருப்பதாகவும், சில முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் அவர் தெரிவித்தார்.


கடந்த 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளே அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.


குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர் என்ற ரீதியில் வரவு செலவுத் திட்டத்தில் உள்ள தவறுகளையும் பலவீனங்களையும் சுட்டிக்காட்டி மக்களுக்கு நன்மைகளை பெற்றுக் கொடுப்பது தனது கடமையாகும் என்றார்.


வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடைமுறை வேலைத்திட்டம் எதுவும் இல்லை எனவும், வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை கிராமிய மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.


வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   


No comments

Powered by Blogger.