Header Ads



வரலாற்றில் முக்கிய திருப்பம், நாளை பாராளுமன்றத்தில் நடந்தேற உள்ளது


ஸ்ரீலங்கா கிரிக்கட் (SLC) அதிகாரிகளை நீக்குவதற்கான கூட்டுப் பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


கூட்டுப் பிரேரணை நாளை (நவம்பர் 09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


இன்று -08- பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூட்டுப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இந்த பிரேரணை அன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு மாலையில் வாக்கெடுப்புக்கு விடப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.


முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான SLC க்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் செயல்பாடுகள் நேற்று நீதிமன்ற உத்தரவின் மூலம் இடைநிறுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கிரிக்கெட் நிர்வாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் SLC க்கான இடைக்கால குழு நியமிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.