பாரிய கடல் கொந்தளிப்பு - மீன்பிடி நடவடிக்கைகள் பாதிப்பு
- ரீ.எல்.ஜவ்பர்கான் -
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பாரியளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய காத்தான்குடி,ஏத்துக்கால், பூநொச்சிமுனை, நாவலடி உட்பட பல கரையோர பிரதேசங்களில் இவ்வாறு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.இதனால் கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்.மீனவர்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
மீனவர்கள் தமது மீன்பிடி படகுகள் மற்றும் தோணி களை கரையிலிருந்து தூர இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.
Post a Comment