Header Ads



ஏன் இஸ்ரேலை விட்டுவைத்துள்ளார்கள்....


 - Rosy S Nasrath -


இஸ்ரேலைச் சுற்றி முஸ்லிம் நாடுகள் அதில் எதுவும் ஏழை நாடுகள் அல்ல, ஆனாலும் ஏன் இஸ்ரேலை விட்டுவைத்துள்ளார்கள்....


சவூதிக்கும் துபைக்கும் மற்ற யாருக்கும் பலஸ்தீனியர்களைப் பற்றி கவலை இல்லை, அக்கறை இல்லை. எகிப்தும், இரானும், லெபனானும் ஹமாசுக்கு  ஆயுத உதவி மட்டுமே செய்கின்றன. கத்தாரும்,அபுதாபியும் வெறும் சோத்துப்பொட்டலங்களை மட்டுமே அனுப்புகின்றன. ஏன் இவர்கள் பலஸ்தீனை கைவிட்டுவிட்டார்கள்? - என்பதாக இஸ்லாமிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களே பதிவுகளை போட்டுக்குவித்து வருகின்றனர்.


இவர்கள் இங்கே குறிப்பிடும் நாடுகள் ஒன்று சேர்ந்து அடித்தால் அங்கு வாழும் ஒரு கோடி யூதனும் அரைமணிநேரத்தில் தடமே இல்லாமல் அழிந்து போவார்கள் தான், ஆனால் அவர்களோடு சேர்ந்து அப்பாவி யூதர்களும் அழிந்துபோவார்களே! பலஸ்தீன் மக்களை ஆதரிப்பவர்களும் அவர்களுக்காக குரல் கொடுப்பவரும் சேர்ந்தே அழிந்துபோவார்களே! 


"கொலைக்கு கொலை தீர்வாகாது", 


"ஒரு உயிரைக் கொன்றவன் உலக உயிர்களை கொன்றதற்கு சமமாவான்",


" உங்களுக்குள் பிணக்கு உருவாகுமானால் நீங்கள் சமாதானத்தை தேடிக்கொள்ளுங்கள்",


" சண்டையிடும் இருவரை பிரித்துவிடுவதை விட சமரசம் பேசி சேர்த்து வைப்பதே அல்லாஹ்வுக்கு பிடித்த செயல்"  - போன்றதான இஸ்லாமிய கோட்பாடுகளை நாமும் காற்றில் பறக்கவிட்டது போலாகுமே?


பலஸ்தீன் ஒரு தனி தேசம், அவர்களுக்கான அமீர் (கிலாஃபத்) என்ற ஒன்று உண்டு, அவர்கள் அதற்கு கட்டுப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அது போலத்தான் மற்ற இஸ்லாமிய நாடுகளும் இருக்கின்றன. அமேரிக்கா போல எல்லோருடைய சண்டையிலும் மூக்கை நுழைக்கும் கொள்கை இஸ்லாமிய நாடுகளுடைய சட்டத்திட்டங்களுக்கு இல்லை என்பதை புரியாமல் முஸ்லிம்களே கண்ட கண்ட அவதூறுகளை பரப்பிக்கொண்டிருக்கின்றனர். 


எந்த நாடும் தனக்கு உதவி வேண்டும் என கேட்காதபட்சத்தில் மற்ற நாடுகள் அவர்களுக்கு ராணுவ உதவி செய்யமுடியாது, பலஸ்தீன் நாட்டிற்கு என ஒரு பிரதமர் இருக்கிறார் (முஹம்மது ஷ்தயா) , அதுபோல ஹமாஸ் அமைக்க விரும்பும் பலஸ்தீனுக்கு என ஹமாஸ் பிரதமர் (இஸாம் அல்'தலீஸ்) என ஒருவர் இருக்கிறார், இதில் யாரும் மற்ற நாட்டு உதவிகளை கோரவில்லை எனும் போது உலகப்போரை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் விரும்பவில்லை என்பதே அர்த்தம். பலஸ்தீனும் தன் பிரச்சனைக்குள் உலக மக்களை கொண்டுவரக்கூடாது என்ற பெருந்தன்மையை கடைபிடிப்பதாகவே இதை புரிந்துகொள்ள வேண்டும்.


யூதர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால் அது ஸயோணிகளை மட்டும் குறிப்பார்த்து தாக்கும் என்றொரு நவீன ஆயுதம் கண்டுபிடிக்கப்படும் வரை இஸ்லாமிய நாடுகள் தங்களது தாக்குதலை யார் மீதும் நடத்தாது.



1 comment:

  1. அரை கிறுக்கு எல்லாம் தத்துவம் சொல்லப்புறப்பட்டால் இப்படித்தான் இருக்கும். சதித்திட்டம் போட்டு பலஸ்தீனை ஆக்கிரமித்து அதிலே இஸ்ரேல் என்றொரு நாட்டை அறிவித்து உலகத்தில் மற்ற இடங்களில் உள்ள யூதர்களை அங்கே குடியேற்றினார்கள். அங்கு வந்து குடியேறுபவனும் ஆக்கிரமிப்பாளனே. முஸ்லிம்களை கொன்று இடங்களை ஆக்கிரமித்து வந்து குடியேறுகின்றோம் என்று தெரிந்து தானே வந்து குடியேறினார்கள். என்றாவது ஒருநாள் எங்களுக்கும் அதே போல் பதிலடி கிடைக்கும் என்று தெரிந்து தானே வந்தார்கள். பதிலடி நியாயம் தான்.

    ReplyDelete

Powered by Blogger.