Header Ads



காத்தான்குடியை நாசம் செய்ய சதியா..? போதைப் பொருட்களுடன் கைதாகும் நபர்கள்


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடியில் இரு வர்த்தகர்கள் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் (26) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி  ஏ எம் எஸ் ஏ ரஹீம் தெரிவித்தார்


மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் காரிய வசத்தின் பணிப்புரையின் பேரில்காத்தான்குடி இரண்டாம் பிரிவு ஹிழுறியா பள்ளி வாயில் அருகில் வைத்து 26 வயதுடைய இளைஞர் ஒருவரும் புதிய காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்துக்கு பின்வீதியில் வைத்து 34 வயதுடைய மற்றொரு இளைஞரும் இவ்வாறு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்


கைது செய்யப்பட்ட ஒரு நபரிடமிருந்து 2037 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் மற்றும் மற்றொரு நபரிடமிருந்து ஹெராயின் போதைப் பொருட்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்


கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.


2


25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் வவுனியாவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.


கிடைக்கப்பெற்ற தகவலலொன்றையடுத்து புதிய காத்தான்குடி கர்பலா பகுதிகளில் வைத்தே ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.