Header Ads



இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக, பிற நாடுகளுக்கு கடத்தப்பட்ட குழந்தைகள்


இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக பிற நாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் குடிவரவுத் திணைக்களம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் அவசர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று (27) காலை குறித்த திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு குழந்தைகளை கடத்தியதில் இடைத்தரகர்களுக்கு குழந்தைகளின் பெற்றோர்கள் 75 லட்சம் ரூபாயை வழங்கியது முன்னதாக தெரியவந்தது.


நீண்ட கால விசாரணையின் பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதுவரை வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13 ஆக உள்ளது.

1 comment:

  1. சிறுவர் பாதுகாப்பு சபை புதிதாக என்னவோ கண்டுபிடிப்பை மேற்கொண்டு வேறு விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம். இந்த அனாச்சாரம் கடந்த 45 வருடங்களுக்கு மேலாக நடைபெறுவதாகவும் அன்றைய லங்காதீப பத்திரிகை இது பற்றி முழுப்பக்கச் செய்தியை வௌியிட்டு அந்த அட்டகாசத்தின் பின்னால் அரசியல் வாதிகளும் பங்காளர்களாக இருக்கின்றனர் என்ற செய்தியையும் அன்றைய லங்காதிப பத்திரிகை செய்தி வௌியிட்டிருந்தமை நாம் வாசித்தது இன்று போல் நினைவிருக்கின்றது. அக்காலத்தில் ரஷ்யாவின் ஏரோபிலைட் விமானம் தான் இந்த அப்பாவி குழந்தைகளை ஏற்றிச் செல்வதாகவும் வழமையாக இந்த சைத்தானிய கைங்கரியத்தைச் செய்வதற்கு ரஷ்ய வ விமானம் சுமார் அரை மணித்தியாலம் தாமதித்துச் செல்வதாகவும் அந்த அரை மணி நேரத்தில் இந்த குழந்தை கடத்தல் ஊழல் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுவதாகவும் அந்த செய்தி குறிப்பிட்டிருந்தது. 45 வருடங்களாக கண்ணை மூடிக் கொண்டிருந்த இந்த சமூகம் இப்போது தான் விழித்திருக்கின்றது என்பதை நினைக்கும் போது அழுவதா சிரிப்பதாக என்பது புரியவில்லை. Sri Lanka is a land of NO other in the world.

    ReplyDelete

Powered by Blogger.