Header Ads



கம்பஹா மாவட்ட இஸ்லாமிய போட்டி - நீர்கொழும்பு விஸ்டம் முதலிடம் (படங்கள்)


- Ismathul Rahuman -


 நீர்கொழும்பு வை.எம்.எம்.ஏ மற்றும் பெரியமுல்லை அஹதிய்யா பாடசாலை இணைந்து நடாத்திய மீலாத் விழாவும், பரிசளிப்பு நிகழ்வும், வாழ்வோரை வாழ்த்தும்  நிகழ்ச்சியும்  நீர்கொழும்பு மாரிஸ்டலா உள்ளரங்கில் நடைபெற்றன. 


இந்நிகழ்வுகளின் பிரதம அதிதியாக அகில இலங்கை கல்வி மாநாட்டின் பதில் தலைவரும், கல்வி அமைச்சின் இஸ்லாம் ஆலோசணை சபை உறுப்பினரும், ஓய்வுநிலை அதிபருமான எம்.எம்.எம். றிழுவான் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், கெளரவ அதிதிகளாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை தேசிய தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட், இலங்கை  அஹதிய்யா பாடசாலை  மத்திய சம்மேளனத்தின் தேசிய தலைவர் எம்.ஆர்.எம். சரூக் ஆகியோர்களும் விஷேட அதிதியாக நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச். எரிக் பெரேராவும்  பிரதம பேச்சாளராக ஜாமியா நழீமிய்யா கலாபீட  சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ் ஷேய்க் எஸ்.எச்.எம். பளீல்  அவர்களும்  கலந்துகொண்டனர்.


கம்ஹா மாவட்ட பாடசாலைகள், அரபு மத்ரஸாக்கள், அஹதிய்யா பாடசாலைகள் ஆகியவற்றிக்கிடையே நடைபெற்ற  தமிழ், சிங்களம், ஆங்கிலம், அரபு ஆகிய நான்கு மொழிகளில் பல்வேறு இஸ்லாமிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. வெற்றிபெற்ற சில மாணவர்களின் நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.


வை.எம்.எம்.ஏ.யின் முன்னால் தலைவர்கள் மற்றும் சமூக சேவையில் ஈடுபாடுள்ள பிரமுகர்களும், இந்நிகழ்வின் போது பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படனர்.


கம்பஹா மாவட்டத்தை மையமாக வைத்து நடந்த 2500 மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டி நிகழ்ச்சியில், நீர்கொழும்பு விஸ்டம் சர்வதேச பாடசாலை முதலாம் இடத்தையும், சீதுவ சேலான் சர்வதேச பாடசாலை இரண்டாம் இடத்தையும், நீர்கொழும்பு அல் ஹிலால் தேசிய பாடசாலை மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.









1 comment:

  1. இன்றைய இளம் சிறுவர்களை தீய வழிகளில் இருந்து தடுத்து நல்வழிப்படுத்தும் சிறப்பானதொரு முயற்சி.

    ReplyDelete

Powered by Blogger.