இஸ்ரேலின் கொடிய செயலை, கடுமையாக கண்டிக்கிறது கத்தார்
காசாவின் புனரமைப்புக்கான கத்தார் குழுவின் தலைமையகத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது, காசாவிற்கு உதவி வழங்குவதில் இருந்து கத்தாரைத் தடுக்காது என்று ஐ.நாவுக்கான கத்தாரின் நிரந்தரப் பிரதிநிதி ஷேக்கா அல்யா அஹ்மத் பின் சைஃப் அல் தானி கூறினார்.
"இந்த குற்றம் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும்" என்று நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் முறைசாரா கூட்டத்தில் அவர் அறிக்கை வாசிக்கிறார்.
காசாவில் உடனடியாக மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
காசாவில் போர் தொடங்கியதில் இருந்து எகிப்திய நகரமான எல் அரிஷுக்கு உணவு, தங்குமிடங்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் கள மருத்துவமனை உட்பட 358 டன்களுக்கும் அதிகமான உதவிகளை கத்தார் அனுப்பியுள்ளது.
Post a Comment