கொழும்பை வந்தடைந்த பிரம்மாண்ட கப்பல்
இந்தியாவின் கொச்சியில் இருந்து 2,780 பயணிகளுடன் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1,273 பணியாளர்கள் இந்த கப்பலில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.
306 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் 15 தளங்கள் மற்றும் நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. நவம்பர் 13 ஆம் திகதி டுபாயில் இருந்து புறப்பட்ட கப்பல் நவம்பர் 16 ஆம் திகதி மும்பையை சென்றடைந்துள்ளது.
இலங்கை வந்துள்ள இந்தக் கப்பல் பின்னர் தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் உல்லாச பயண துறையை ஊக்குவிக்கும் வகையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் இலங்கைக்கு இந்த கப்பல் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில், இலங்கை வரும் உல்லாச பயணிகளை இலங்கையின் சுற்றுலாதலங்களை பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யவும், இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான கலந்துரையாடலும் உல்லாச பயணிகளோடு மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரியவருகிறது.
Post a Comment