Header Ads



இரத்தத்தை குடிக்கும், இஸ்ரேலிய காட்டேறிகளே


- யாழ் அஸீம் -

நாய்களாய் அலைந்த  

நாடோடி சமூகமே!

சபிக்கப்பட்ட 

சாத்தானிய கூட்டமே!

அடைக்கலம் தந்த

அப்பாவி உயிர்களின்...

எப்பாவமுமறியா

பச்சிளம்பாலகரின்...

இரத்தத்தை குடிக்கும்

இஸ்ரேலிய காட்டேறியே!


இத்தனை உயிர்களை

இரையாக்கி ஏப்பமிட்டும் 

இன்னும் அடங்கவில்லை உன்

இரத்தத் தாகம்!


மண்ணின் மைந்தரை

வந்தேறு  குடிகள் 

துவம்சம் செய்யும்

வரலாறு காணாத 

கொலைக்களமிது!


இடிந்த மஸ்ஜிதில் 

சிதறிய தலைகளைக் 

கட்டியழும் சோதரர்...

கல்விக் கூடங்களில்

கால்வேறு கைவேறாய்

சிதறிய செல்வங்களை...

குருதியில் நனைந்த 

மழலை குஞ்சுகளை 

மடியிலிட்டு கதறும் 

பெற்றோரின் ஓலங்கள்!

கசிந்திடும் விழிகளுடன்...

கனத்திடும் நெஞ்சுடன்

கலங்கிடும் இஸ்லாமிய உம்மத்!


பாலகர்... பெண்கள்...

வயோதிபர்... நோயாளிகள்... 

இவர்கள்தான் பயங்கரவாதிகள்

இஸ்ரேலிய அரக்கர்களுக்கு!


பாடசாலைகள்.. பள்ளிவாசல்கள்..

வைத்தியசாலைகள்.. அகதிமுகாம்கள்..

இவைதான்

பயங்கரவாதிகளின் முகாம்கள்... 

இஸ்ரேலியப் பேய்களுக்கு!


காஸா மக்களின்

சதைகளைத் தின்று...

கொலைவெறிபிடித்து

இரத்தத்தை ஓட்டும்...

கொலை வெறி கண்டும்

கை கட்டி நிற்கிறது

நாகரிக உலகம்!


நாகரிகம் பேசும்

மேற்குலக நாடுகளே!

இரத்த வெறிகொண்ட

இஸ்ரேலியப் பேயின்

ஈனச் செயல்களை

உங்கள் ஊனக் கண்கள் 

காணாமல் போனதுமேன்?


அரபுலக அடிமைகள்

ஊமைகளாய் மௌனிக்க...

கறுப்பு உள்ளங்கள்

செங்கம்பளம் விரிக்க

அரங்கேறும் அராஜகம்

அனைத்துலக பயங்கரவாதம்

சர்வதேச மனிதஉரிமை மீறல்!


வரலாறு காணாத

வன்முறை கண்டும்...

மனித உரிமை பற்றி 

மார்தட்டி ஓலமிடும் 

மேற்குலக நாடுகள்

நாவசைக்க மறுக்கிறது...!


பயங்கரவாதத்துக்கு

இலக்கணம் வகுத்தோர்

இஸ்ரேலியக் கொலைவெறிக்கு

என்ன பெயர் வைத்தனரோ?


காஸா மண்ணில்

எரிகின்ற நெருப்பை 

அணைத்திடத் தயங்கும்

மானிடநேசர்களே...

மனித உரிமை ஆர்வலரே...

ஐக்கியப்படுத்தும்

நாடுகளின் சபையே!

பயங்கரவாதம் பேசிய உங்கள் 

முகங்கள் எங்கே?



இனவெறி தெறிக்கும்

கொடூர விழிகளுடன்...

பலஸ்தீன் இரத்தம்

வழிந்தோடும் பற்களுடன்

உங்கள்

நிஜமான முகங்கள்

இப்போதன்றோ

நிதர்சனமாகிறது!


இரத்தம் கசியும்

ஈமானிய தேசமாம்

காஸா  மண்ணுக்காக - எம்

கரங்கள் உயரும் வேளை  

கண்ணீர் சிந்தும் வேளை  

அர்கத்  செடிகளுக்குள்

ஓடி ஒழிவார்கள் அந்நாளில்!


No comments

Powered by Blogger.