நிமிர்ந்து பார்த்து எச்சில் துப்புவது போன்றது
உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் விருதை ஏற்க செல்ல நேர்ந்தமை மிகுந்த வருத்தமளிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மிகவும் வருந்துவதாகவும், இலங்கையில் கிரிக்கெட்டை யாரேனும் தடை செய்யுமாறு கேட்டால், நிமிர்ந்து பார்த்து எச்சில் துப்புவது போன்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சியில் ஈடுபட விரும்புவதாகவும், சந்தர்ப்பம் கிடைத்தால், தன்னால் இயன்றவரை விளையாட்டை மேம்படுத்த பாடுபடுவேன் என்றும் கூறினார்.
இன்றும் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கிறேன்.கிரிக்கெட் தொடர்பாக படிக்கின்றேன் என தெரிவித்தார்.
இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் இருவருக்கும் ஐசிசி கௌரவம் வழங்குவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment