ஆசம் கானுக்கு பெருகும் ஆதரவு
ஆசம் கானின் பாலத்தீன ஆதரவு செயலுக்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வையொட்டி சமூக ஊடகங்களில் ஆசம் கானுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைக்கும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்படுகின்றன.
ஆசம் கானின் ஊதியத்திலிருந்து 50% அபராதமாக விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பாலத்தீனத்திற்கு ஆதரவாக பேட்டில் ஸ்டிக்கர் ஒட்டிய ஆசம் கானுக்கு அபராதம் விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அத்துடன் ஆசம் கானுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவரைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
"ஆசம் கானுக்கு அபராதம் விதிப்பது சரியல்ல. பாகிஸ்தான், பாலத்தீனத்தை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும்," என்று சில பயனர்கள் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் தெரிவித்துள்ளனர்.
"பாலத்தீனத்தை ஆதரிப்பது குற்றம் என்றால், ஆசம் கான் மட்டுமல்ல. நாம் அனைவரும் அபராதம் செலுத்த வேண்டும்," என அலிசி என்ற பயனர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், "இந்த பேட்டை ஏலத்தில் விடுங்கள், ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.
Post a Comment