Header Ads



சர்ச்சைக்குரிய போதகர் நாட்டை வந்தடைந்தார்


சர்ச்சைக்குரிய பிரசங்கம் தொடர்பில் தம்மை கைது செய்ய வேண்டாம் என கடந்த வாரம் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (29)காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தார்.


பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதத்திற்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக  குற்றப்புலனாய்வு துறையினரின் விசாரணைகளின் கீழ் இருந்த பெர்னாண்டோ, மே 15ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறினார்.


போதகர் ஜெரோம் தாக்கல் செய்த ரிட் மனுவை ஏற்று, கடந்த வாரம் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரை விமான நிலையத்திலோ அல்லது வேறு எங்கும் கைது செய்யக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.


மேலும், நாட்டிற்கு வந்த 48 மணி நேரத்திற்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்குமாறு போதகருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


இன்று (29) அதிகாலை தோஹாவில் இருந்து கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், "கோல்ட் ரூட்" ஊடாக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். போதகருடன் மேலும் இரண்டு பயணிகளும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.