Header Ads



மொசாதின் கண்களில் மண்ணைத் தூவி, பத்திரமாக வைத்திருந்தது எப்படி..? (படங்கள்)

இரண்டாம் கட்ட பணயக் கைதிகளை ஒப்படைக்கும் காணொளியை  இன்று -26- அதிகாலை 5 மணிக்கு வெளியிட்டது, அல் ஜஸீரா. 


பல்வேறு தடைகளைத் தாண்டி, நேற்று இரவு, 13 பணயக் கைதிகளின் விடுதலைக்கு ஈடாக 39 பாலஸ்தீன சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்.


உள்ளூர் முதல் உலகளவில் போராளிகளைப் பற்றித்தான் எவ்வளவு பொய்கள்; அவதூறுகள்; விமர்சனங்கள்?


இந்த பணயக் கைதிகளின் முகத்தை பாருங்கள்!


நீண்டநாள் பழகிய நண்பர்கள்; விருந்தாளிகள் பிரியாவிடை பெறுவதைப் போல... எவ்வளவு மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த புகைப்படங்களே சாட்சி!


போராளிகள் அவர்களிடம் எவ்வளவு கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடந்துகொண்டார்கள் என்பதை இந்த பணயக் கைதிகளின் கண்களிலிருந்து நாம் வாசித்துத் தெரிந்துகொள்ளலாம்.


போராளிகளிடம் பணயக் கைதியாக இருப்பதற்கும், இஸ்ரேலிடம் சிறை கைதியாக இருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை அவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.


மொசாதின் உளவுக் கண்களில் மண்ணைத் தூவி, இத்தனை நாட்கள் இவர்களை எங்கே பத்திரமாக வைத்திருந்தார்கள்; இப்போது எங்கிருந்து அழைத்துக்கொண்டு வருகிறார்கள்... என எல்லாமே வியப்பாகவும் புதிராகவும் இருக்கிறது... 


....மாஸ் விடுதலை செய்தவர்களை பொதுமக்கள் முன் ஏன் காட்டுவதில்லை என்றும் இஸ்ரேல் சிறையில் இருந்து வந்தவர்கள் ஊடங்கள் முன் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டால் இஸ்ரேலின் இன்னொரு கோரமுகம் நமக்கு தெரிய வரும்.


இனி இவர்களை வைத்து போராளிகளுக்கு எதிராக என்னென்ன கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான்  பார்க வேண்டும்.


நிறைந்த புன்னகையோடு... கண்கள் பனிக்க... கைகளை அசைத்தபடி... வாழ்த்துகளைப் பரிமாறி அவர்கள் விடைபெறும் இந்தக் காட்சிகள், போராளிகளைப் பற்றி வேறொரு முகத்தை இந்த உலகத்திற்கு காட்டும்.


“நாங்கள் குர்ஆன் வழி நடப்பவர்கள்; எங்கள் விஷயத்தில் நீங்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என்று ஆரம்பத்திலேயே பணயக் கைதிகளிடம் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை போராளிகள் நிறைவேற்றிவிட்டர்கள். 


மனிதநேயத்தையும் அழகிய போர் மரபுகளையும் எதிரிகளிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற நாகரிகத்தையும் கற்றுத் தரும் மற்றுமொரு உணர்வுபூர்வமான காட்சிகள் இவை. 


விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியர்களில் ஒருசில பேராவது , இஸ்ரேலுக்கு வந்தபின்னரும்...  ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்துடன் ஆழமான பிணைப்புடன் இருப்பார்கள் என்பது மட்டும் உறுதி.❤️


எல்லாப் புகழும் இறைவனுக்கே! ❤️❤️❤️


--ஜாபர் சாதிக் பாக்கவி -





No comments

Powered by Blogger.