Header Ads



பலஸ்தீனுக்கு ஆதரவாக கொழும்பில் திரண்ட மக்கள் - பிரகடனத்தை ஐ.நா.வில் கையளிக்க நடவடிக்கை


பலஸ்தீனுக்கு ஆதரவாக கொழும்பில் சமாதான மாநாடு : பிரகடனம் ஒன்றும் முன்மொழியப்பட்டது. 

 

பலஸ்தீனுக்கு பூரண சமாதானத்துடன் நிம்மதியும், சுதந்திர வாழ்வும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் வீ ஆர் வன் அமைப்பு ஏற்பாடு செய்த சமாதான எழுச்சி நிகழ்வு நேற்று ஆயிரக்கணக்கான மக்களின் பங்கெடுப்புடன் நடைபெற்றது. 


சர்வமத தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கிய பல சிவில் சமூக இயக்கங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இலங்கைக்கான பலஸ்தீன அரசின் தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம். எச். டார் செயிட் கலந்து கொண்டார். 


இந்த சமாதான மாநாட்டில் பிரகடனம் ஒன்று வாசிக்கப்பட்டு அந்த மாநாட்டில் கலந்துகொண்ட சர்வமத தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக இயக்கங்கள் ஆகியவற்றின் ஒப்புதலுடன் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்தில் குறித்த பிரகடனம் கையளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஸ்தாபகரும், பொருளாளருமான ஐ.ஏ. கலீலுர்ரஹ்மான் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.





No comments

Powered by Blogger.