Header Ads



பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை நாம், எளிதாக புரிந்து கொள்வதென்றால்...


பிரபஞ்சத்தின் பிரமாண்டம் பற்றி நாம் எளிதாக புரிந்து கொள்வதென்றால்...


பிரபஞ்சத்தின் மொத்த தொலை தூரம் சுமார் 93 பில்லியன் ஒளி ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுகிறது. 1977 ஆம் ஆண்டு ஆகாயத்தில் ஏவப்பட்ட விண்கலமான வாயேஜர் 1 விண்கலமானது மணிக்கு 61 ஆயிரம் கி.மீ வேகத்தில்  நகர்ந்து கொண்டிருக்கிறது. 


தற்போது 46 வருடங்கள் கடந்தும் அதனால் ஒலி ஆண்டின் ஒரு நாள் தூரத்தைக் கூட தாண்ட முடியவில்லை. இதுவரை அது 17 ஒளி மணி நேர தூரத்தை மட்டுமே தாண்டியிருக்கிறது. 


அது போக, இந்த 93 பில்லியன் ஒளி ஆண்டுகள் என்பது விஞ்சான உலகின்  பார்வைக்கு உட்பட்ட (Observable universe - الكون المرصود) பிரபஞ்சத்தின் தோராயமான கணிப்பீடுதான். விஞ்சான உலகின் கண்கள் காணாத பிரபஞ்சத்தின் பிரமாண்டம் பற்றி படைத்தவனுக்கே வெளிச்சம்.!


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.