Header Ads



எம். எச். ரகீப் அல் ஹாதி எழுதிய 'விநோதக் கனவு' நூலின் அறிமுக விழா


இலங்கை நெய்னார் சமூக நல காப்பகத்தின்  ஏற்பாட்டில் செல்வன் எம். எச். ரகீப் அல் ஹாதி எழுதிய 'விநோதக் கனவு' நூலின் அறிமுக விழா 11.11.2023  இல. 63, தெமட்டகொட வீதியில் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நிகழ்ந்தது .


இந்நூல் அறிமுக விழாவினை பன்னூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் தலைமை தாங்கினார் .நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.


சிறப்பதிதிகளாக தமிழன் பத்திரிக்கை பிரதம ஆசிரியர்  சிவராஜா ராமசாமி .விடிவெள்ளி பத்திரிக்கை ஆசிரியர் எம் பைருஸ் . கெப்பிட்டல் எப் .எம் பணிப்பாளர் ஷியா உல் ஹசன் . பரணிதரன்  ரூபவாஹினி பிரதி பணிப்பாளர் ரினோஷா மற்றும் பல ஊடகவியலாளர்கள் கவிஞர்கள் சமூக சேவகர்கள் என்று பலர் கலந்து கலந்து சிறப்பித்தனர்


 நிகழ்வில் முதற் பிரதியை புரவலர் டாக்டர். எம்.ஏ.எம். முனீர் பெற்றுக்கொண்டார் .


நிகழ்ச்சி செல்வன் ஹுமைத் மெளசூகின் கிராத்துடன் ஆரம்பமானது.

வரவேற்புரையினை கவிதாயினி சிமாரா அலியும் தலைமையுரையினை பன்னூலாசிரியர் அஷ்ரஃப்  ஷிஹாப்தீன் அவர்களும் நிகழ்ர்தினார்கள். செல்வன் எம்.எச். ரஷீத் அல் ஹாமி 'வாசிப்பின் மகிமையை' அழகுற உரை நிகழ்த்த  நூல் உரைதனை ஆசிரியர் திரு பாலஸ்ரீதரன் அவர்களும் கவிஞர் நாச்சியா தீவு பர்வீன் அவர்களும் வழங்கினார்கள். நிகழ்ச்சியின் இடையில் செல்வன் யூசுப் சுஹைலின் இனிமையான பாடல் ஒன்று அரங்கேறியது. 


அத்தோடு கெளரவ மனோ கணேசன் அவர்களின் அதிதி உரை மிகச் சிறப்பாக மாணவர்களுக்கும். பெற்றோர்களுக்கும் சிறந்த வகையில் தன்னம்பிக்கை  தரும்வகையில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஏற்புரையில் நூலாசிரியர் தான் எவ்வாறு எழுத ஆரம்பித்தார் என்ற தனது அனுபவத்தைப் மகிழ்ந்தார்.  நன்றியுரையினை இளம் எழுத்தாளர் ரகீப் அல் ஹாதியின் தாயாரான எழுத்தாளர் ராஹிலா ஹலாம் அவர்கள் வழங்கினார். நூல் அறிமுக நிகழ்வினை கெப்பிட்டல் எப். எம். அறிவிப்பாளினி தொகுத்து வழங்கினார். 7.00 மணிக்கு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.






No comments

Powered by Blogger.