Header Ads



பலஸ்தீன போராளிகள், யாரை நம்பி களம் இறங்கினார்கள்..?


- Naushad Mohideen -


பலஸ்தீன - இஸ்ரேல் யுத்தம் இப்போது மூன்றாவது வாரத்தைக் கடந்து நான்காவது வாரத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. பலஸ்தீன போராளிகள் தமது எதிரியின் எதிர்ப்பு வீச்சை, அதன் காட்டுமிராண்டி தனத்தை நன்கு அறிந்து கொண்டு யாரை அல்லது எதை நம்பி களம் இறங்கினார்கள்? என்ற கேள்வி நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழுவதுண்டு. 


ஈரான், துருக்கி, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தமது பலஸ்தீன ஆதரவை வெளிப்படுத்தி உள்ளன. ஆனால் சுற்றி உள்ள அரபு நாடுகள் பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தோடு இணைந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. 


இன்று -01- காலையில் வெளியாகி உள்ள ஒரு தகவலின் படி ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முஹமத் அலூபர் என்ற ஒரு பெரும் தனவந்தர் இஸ்ரேலுக்கு 170 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கி உள்ளார். அங்கு கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு உதவ இந்தத் தெகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.


சீனா, துருக்கி. ரஷ்யா என்பனவற்றின் பலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கூட ஸ்திரமானது என நம்ப முடியாது. புவி அரசியல் நிலவர மாற்றங்கiளைப் பொருத்து அவர்களின் நிலைப்பாடும் மாறலாம். அது இஸ்ரேலுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு, என்ற எல்லைக்கு செல்லாவிட்டாலும் கூட இரண்டுக்கும் நடுவில் நடுநிலை வகிக்கின்றோம் என அவர்களும் அயலில் உள்ள அரபு நாடுகளைப் போல் பார்வையாளர்களாக மாறலாம்.


அப்படியென்றால் ஈரான் என்ன செய்யும்? இந்தப் போர் ஒரு வகையில் முற்று முழுதாக ஈரானையும் அதன் ஆயுத பலத்தையும் நம்பி ஈரானுக்காக நடத்தப்படுகின்ற ஒரு பிணாமி யுத்தம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. 


ஆனால் இன்னமும் ஈரான் ஒரு காலத்தில் சதாம்ஹு


ஸேன் பிதற்றியதைப் போல் இன்னமும் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டு தான் இருக்கின்றது என்பதே அநேகரின் அபிப்பிராயமாகும். ஈரானிய வெளியுறவு அமைச்சர் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து சந்திப்புக்களை நடத்திக் கொண்டிருப்பதால் அவரால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியுமா? என்பதே இங்கு எழுகின்ற கேள்வி. அது இராஜதந்திரம் அது கட்டாயம் தேவை என்று பலர் என்னோடு முரண்படலாம். அது இராஜதந்திரம் என்பது எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் இராஜதந்திரம் யாரிடம் பலிக்கும் என்றும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். இவர்களது இராஜதந்திரம் வெற்றி அளித்து அது அமுலுக்கு வருவதற்குள் காஸா பிணங்களை தோண்டித்தோண்டி தேடும் சவக்காடாக மாறிவிடும். 


எனவே ஈரான் இப்போது களம் இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இனிமேலும் இராஜதந்திரம் பேசுவது வேலைக்காகாது என்பதே எனது தாழ்மையான கருத்து. காரணம் இப்போது இந்த யுத்தம் வாழ்வா அல்லது சாவா அல்லது அழிவா என்ற எல்லைக்கு வந்துள்ளது.


அப்படியென்றால் இங்கே மீண்டும் எழும் கேள்வி பலஸ்தீன தரப்பு யாரை அல்லது எதை நம்பி களம் இறங்கியது. இது சம்பந்தமாக பலஸ்தீன போராளிகள் தரப்பில் இருந்து இரண்டு தகவல்கள் எனது கண்களில் பட்டன. ஆனால் அவை முழுக்க முழுக்க சமய நம்பிக்கை சார்ந்ததாக இருந்தது. அதனால் அதைப் பற்றி நான் எதுவும் எழுதவில்லை. எழுதினால் நம்மவர்களே இதெல்லாம் கப்ஸா கதைகள் எனக் கூற வாய்ப்புண்டு.


அனால் கடந்த இரு தினங்களாக சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பு வலம் வந்த வண்ணம் உள்ளது. அது என்னை பெரிதும் ஈர்த்தது. அதனால் எனது நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக தமிழில் தருகின்றேன். வழமைபோல் வாசிப்பு சுவை கருதி கொஞ்சம் சுவையூட்டிகளும் சேர்த்துள்ளேன். இது ஒரு சியோனிஸ யூதனின் கதறல். 


யெடியோத் அஹ்ரனோத் என்ற ஹீப்று மொழி பத்திரிகையில் வெளியாகி அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இப்போது சர்வதேச ரீதியாக சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது, இதை எழுதி இருப்பவர் வேறு யாருமல்ல இஸ்ரேலின் பலம் பொருந்திய உளவு பிரிவான மொஸாட்டின் முன்னாள் தலைவர் டெனி யாடொம். இதோ அந்த ஆக்கம்.


என்னதான் நடக்கின்றது. உண்மையில் என்னதான் நடக்கின்றது. மோஸஸ் மற்றும் ஏரோன் ஆகிய கடவுள்கள் எம்மை கைவிட்டு விட்டனரா? என்னதான் நடக்கின்றது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இஸ்ரேலின் பெருமைக்குரிய தயாரிப்பான மெர்காவா யுத்த தாங்கிக்கு என்னவாயிற்று. ஆயுத உற்பத்தி சந்தையில் இஸ்ரேலின் அடையாள முத்திரை அல்லவா அது. 


அதை நாங்கள் இரும்புக் கோட்டை என்றல்லவா பெருமை பேசினோம். ஆனால் இன்று ஒரு சாதாரண ஆர்பிஜி ரொக்கெட்டுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அது திணறுகின்றது. அதில் ஒன்றின் சந்தைப் பெறுமதி 170 மில்லியன் அமெரிக்க டொலர்கள். ஆனால் ஒரு ஆர்பிஜிக்கு முன்னால் அது துவம்சம் ஆகிப் போகின்றது. 


அது சிதைந்து போகும் காட்சியை நீங்கள் பார்த்தீர்களா? ஒரு ஆர்பிஜி அதை தூக்கி வீசி பந்தாடுகின்றது. அந்த இடம் பூமி அதிர்ச்சி ஏற்பட்ட ஒரு இடம்போல் மாறிவிடுகின்றது. இது என்ன அதிசயம் என்னால் நம்பவே முடியவில்லை. உண்மையில் என்னதான் நடக்கின்றது. 


சுமார் ஒரு தொன் எடை கொண்ட ஒரு குண்டு தாக்கினால் மட்டும் தான் மெர்காவாவை துவம்சம் செய்ய முடியும் என்பதல்லவா எமது நம்பிக்கை. ஒரு ஆர்பிஜிக்கு எப்படி இவ்வளவு வலு வந்தது? உண்மையில் என்னதான் நடக்கின்றது?


அக்டோபர் ஏழாம் திகதி முதல் பலஸ்தீனர்கள் எம்மை நோக்கி வைத்த எந்தக் குறியும் பிழைக்கவில்லை. பலஸ்தீனத்தின் சகல முனைகளில் இருந்தும் அவர்கள் வைத்த இலக்குகள் துல்லியமாக இருக்கின்றன. கொஞ்சம் கூட பிசகாமல் அவை எமது நிலைகளைத் தாக்குகின்றன. ஒரு யுத்தத்தில் இது எப்படி சாத்தியமாகும்?? செய்மதி வழியாக குறி வைத்தால் கூட இது சாத்தியமாகுமா? என்று தெரியவில்லை.


அவர்களோடு நின்று போராடுகின்றவர்கள் யார்? எம்மை குறி வைப்பவர்கள் யார்? பேய்கள் அவர்களோடு கூட்டு சேர்ந்து விட்டனவா? யூதர்களை அழிக்க பலஸ்தீனர்களோடு பேய்கள் களம் இறங்கி உள்ளனவா. அப்படியானால் உண்மையில் என்னதான் நடக்கின்றது? மோஸஸ் மற்றும் ஏரோன் ஆகிய கடவுள்கள் எம்மை கைவிட்டு விட்டனரா?  புரியவில்லை.


ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. துரதிஷ்டவசமாக எமக்கு அழிவு நெருங்கி விட்டது. இஸ்ரேல் என்ற நாடு தவிர்க்கமுடியாத வகையில் அதன் அழிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. 


இவ்வளவுதான் அந்தக் கதறல்.


பின்குறிப்பு : அவர் குறிப்பிட்டுள்ள மெர்காவா ரக யுத்த தாங்கிகள் இதுவரை 30க்கு மேல் அழிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.


இப்போது புரியும் என்று நினைக்கிறேன் பலஸ்தீன போராளிகள் யாரை நம்பி களம் இறங்கி உள்ளனர் என்று.

No comments

Powered by Blogger.