பாகிஸ்தான் கிரிக்கெட்டை உதாரணம் காட்டும் அமைச்சர் ஹரீன்
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவரகத்தின் வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
கிரிக்கெட் சிக்கல்களை தீர்க்கவே என்னை நியமித்துள்ளனர். பாரிய பிரச்சினை விளையாட்டு சங்கங்கள். சங்கங்களில் பிரச்சினை காரணமாக வீரர்களில் பிரச்சினைகளுக்கு நேரமில்லை. கிரிக்கெட் சட்டத்தை மாற்ற வேண்டும். ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் கீழ் சட்டமொன்று உள்ளது. கிரிக்கெட் ஊழல்களுக்கு தண்டனை வழங்கும் முறை. 10 வருட சிறைத்தண்டனை மற்றும் 100 மில்லியன் அபராதம் பெறவும் முடியும். இதனை இலகுவில் தீர்த்துக் கொள்ள இருந்தது. அரசியல் இலாபத்திற்காக பேசாமல் இருந்திருந்தால் கிடைத்த ஆதரவின் ஊடாக சட்டமாக நிறைவேற்ற முடிந்திருக்கும்.
உதாரணத்திற்கு பாகிஸ்தானில் பாகிஸ்தான் பிரதமர்தான் கிரிக்கெட் தலைவரை நியமிப்பார். அந்த சட்டம் அந்நாட்டு விளையாட்டு சட்டத்தில் உள்ளது. ஐசிசிக்கு அதனை சவாலுக்கு உட்படுத்த முடியாது. கிரிக்கெட் தடை நீக்கப்படும். 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கைக்கு கிடைத்தால் இந்நாட்டு சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தியிருக்கலாம். போட்டித் தொடருக்கு முன்னதாகவே விடுதிகள் புக் செய்யப்பட்டுள்ளன. போட்டித் தொடரை இழந்தது நமக்கு பாரிய பாதகம். ஐசிசி கூட்டமொன்று ஜூன் மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ளது. அதையாவது இலங்கையில் நடத்த முயற்சிக்க வேண்டும்.
Post a Comment