Header Ads



விடுதலையான இஸ்ரேலியப் பெண், காசாவின் முஜாஹிதீன்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்


இஸ்ரேலியப் பெண் டேனியல், தடுப்புக் காவலில் இருந்த காலத்தில்  துணைக்கு நின்ற முஜாஹிதீன்களுக்கும், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைமைத்துவத்துக்கும் எழுதிய ஒரு கடிதம் 


23/11/2023


சமீபத்திய வாரங்களில் எனது துணைக்கு நின்ற தளபதிகளுக்கு, 


நாம் நாளை பிரிவோம் என்று தோன்றுகிறது, ஆனால் எனது மகள் எமிலியாவிடம் நீங்கள் காட்டிய அசாதாரண மனிதநேயத்துக்காக எனது அடிமனதிலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 


நீங்கள் அவளுடைய பெற்றோரைப் போல் நடந்து கொண்டீர்கள், அவள் விரும்பும் ஒவ்வொரு முறையும், அவளை உங்கள் அறைக்கு அழைத்தீர்கள். அவள் உங்களை நண்பர்களாக மாத்திரமல்ல, சிறந்த நேசர்களாகவும் கருதினாள் என்பது தெளிவாகத் தெரிந்தது. நீங்கள் அவளுடைய ஆயாவைப் போல் செலவழித்த எண்ணற்ற மணித்தியாலங்களுக்கு எண்ணற்ற நன்றிகள். 


உங்கள் பொறுமை, இனிப்புப் பண்டங்களைக் கொண்டும் பழங்களைக் கொண்டும் அவளை மகிழ்ச்சிப்படுத்திய விதம், வளங்களின்  பற்றாக்குறை இருந்தும் கூட உங்கள் உபசரிப்பு, ஒட்டுமொத்தக் கவனிப்பு ஆகியவற்றுக்கு நன்றிகள். 


சிறுவர்கள் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்படக்கூடியவர்கள் அல்லர், ஆனாலும் மற்றவர்கள் உங்களை அறிந்து கொள்வதற்காக நீங்கள் அவ்வாறு நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ளத்தக்கது. 


எனது மகள் அவளை காசாவின் இராணியாகக் கருதுகிறாள். எமது பயணம் முழுதும், சாதாரண மக்கள் முதல் தளபதிகள் வரை அனைவரும் அவளை அன்புடன், பரிவுடன், இரக்கத்துடன் நடத்தினர். அவள் எந்த விதமான நீடித்த உளவியல் அதிர்ச்சிகளுக்கும் ஆட்படாமல், இங்கிருந்து வெளியேறிச் செல்கிறாள் என்பதற்காக, நான் உங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.  


காசாவில் உங்களுடைய சொந்த சவால்களும், இழப்புகளும் இருந்தபோதிலும் கூட, உங்கள் கருணை மிகுந்த நடடவடிக்கைகள் பாராட்டப்படத்தக்கன. 


இந்த உலகில் தூய்மையான, நீடித்த நட்புணர்வை நான் விரும்புகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆரோக்கியம், நல்வாழ்வு, அன்பு ஆகியன கிட்டட்டுமாக. உங்களுக்கு மிக்க நன்றி, 


டேனியல், எமிலியா.



Safran Mohamed

No comments

Powered by Blogger.