Header Ads



பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகுமா..?


அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், கட்சி உறுப்புரிமையில் இருந்து  நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.


அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவரை நீக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட தேர்தல் உடன்படிக்கையின் பிரகாரம், தராசுச் சின்னத்தில் அலிசப்ரி ரஹீம் போட்டியிட்டார்.


இதற்கிணங்க, இவரது பதவி நீக்கம் குறித்த கடிதம் அலிசப்ரி ரஹீமுக்கும்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிரதி, முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நயீமுல்லாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


கடிதத்தைப் பொறுப்பேற்றுள்ள முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நயீமுல்லா, இது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இவன் ஒரு சமூகத் துரோகி மட்டுமல்ல தங்கம் கடத்தி நாட்டுக்கே அவமானததைக் கொண்டு வந்த இந்த நபரை தியவன்னாவை ஆற்றில் தள்ளிவிடவேண்டியது அனைத்து மக்களின் கடமையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.