Header Ads



இந்தியாவின் தோல்வியை தாங்காதவரின் துயரமான முடிவு


உலக கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை தாங்கமுடியாமல் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதில் கடந்த போட்டிகளில் வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணி நேற்றையதினம் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்திருந்தது.


இந்த சம்பவமானது ஒட்டுமொத்த இந்திய அணி ரசிகர்களையும் நிலைகுழைய செய்தது. இதனால் உயிர் பறிபோன சம்பவம் இந்தியாவின் திருப்பதி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.


திடீரென மாரடைப்பு திருப்பதி அருகே துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஜோதி குமார் என்பவருக்கே இது நிகழ்ந்துள்ளது. இவர் நேற்றைய தினம் தனது வீட்டில் இருந்து இறுதி போட்டியை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.


இதில் இந்தியா தோல்வியடைந்ததையடுத்து இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தார்கள் தெரிவித்துள்ளனர்.


பதறியடித்த குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.