யார் இந்த, இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம்..?
1935.11.20 ஆம் திகதி இன்று போல் ஒரு நாள் அறிஞர் இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் 12 பேருடன் பலஸ்தீன் ஜெனீன் நகரில் உள்ள குகை ஒன்றில் பிரித்தானிய படைகளை இலக்கு வைத்து ஆயுதம் ஏந்தி காத்திருக்கின்றார்.
பிரித்தானிய படை நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்படுகின்றனர். எஞ்சி இருப்பது ஒன்பது பேர் , 450 பிரித்தானிய படையினர் சுற்றி வளைத்து உடனே சரணடைய வேண்டுகின்றனர்.
அந்த மா மனிதன் 9 பேருடன் 450 பேரை எதிர் கொள்கின்றார். உக்கிரமான சண்டை 9 மணி நேரத்திற்கு மேல் தொடர்கிறது பல பிரித்தானிய ஆக்கிரமிப்பு படையினர் கொல்லப்படுகின்றனர். இறுதியில் பேரறிஞர் இஸ்ஸதீன் அல் கஸ்ஸாமின் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்கின்றது .
இதயத்தில் இருந்து துளித் துளியாக இரத்தம் பலஸ்தீன் மண்ணில் விழுகிறது. ஒரு பேரறிஞர் ,மிகப் பெரிய போராளியின் உயிர் தூய கலிமாவை மொழிந்தவாரே பிரிகிறது. அந்த ஒவ்வொரு துளி குருதியும் இன்று பெரும் மரமாக மாறி மொத்த அமெரிக்க ,ஐரோப்பிய நாகரீகத்திற்கும் சவால் விடுகிறது.
யார் இந்த இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் (ரஹ்)
இவரது தந்தை காதீரியா தரீகாவின் ஷெய்க்காக இருந்தவர். இவரும் மரணிக்கும் வரை காதிரீயா தரீகாவின் ஷெய்க்காக இருந்தவர் அவர் முஹீயுத்தீன் அப்துல் காதீர் ஜீலானி(ரஹ்) பயன்படுத்திய அதே முறையில் சிரிய , பலஸ்தீனிய மக்களை பயிற்றுவித்தார். அவர் ஒரு விடயத்தில் தெளிவாக இருந்தார் மக்களை ஆன்மீக ரீதியாக பயிற்றுவிக்காது இஸ்லாமிய குடும்பங்களை உருவாக்காது அந்நிய படைகளை விரட்டி அடிக்க முடியாது.
ஹய்பாவில் பள்ளிவாயல் இமாமக இருந்த அவர், கடுமையாக மக்களை ஆன்மீக ரீதியாக பயிற்றுவித்தார் இதனாலேயே அவர் மரணித்த அடுத்த வருடம் 1936 இல் அரபு புரட்சி ஏற்பட்டது.
இவர் சாதாரணமான ஆள் கிடையாது
இத்தாலி லிபியாவை ஆக்கிரமித்தபோது, உமர் முக்தார் தலைமை தாங்கிய லிபிய எதிர்ப்பு இயக்கத்திற்காக நிதி வசூலித்தார்கள். மேலும் பல இளைஞர்களை ஒன்று சேர்த்து லிபியாவிற்கு ஜிஹாத் படையை கொண்டு சென்றார்கள். ஆனால் அப்போது நடந்த ஆட்சி மாற்றத்தினால் அவர்களுக்கு அங்கு செல்ல உதுமானிய அரசு அனுமதி மறுத்துவிட்டது.
சிரியாவை ஆக்கிரமித்த பிரான்ஸிற்கு எதிராக பல்வேறு முறைகளில் ஜிஹாத் செய்தார்கள்.
பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இருந்த லெபனான் வந்து அங்குள்ள தாழ்ந்த வகுப்பு மக்களின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களை செய்தார்கள். அத்தொழிலாளர் வகுப்பு மக்களுக்காக இரவு பாடசாலையை அமைத்து இவர்களே இமாமாக இருந்து கற்று கொடுத்தார்கள். அக்கால கட்டத்திலே யூத தேசிய நிதி மற்றும் ஹிப்ரு தொழிலாளர் கொள்கைகள் போன்றவற்றால் வஞ்சகமாக நிலங்கள் வாங்கப்பட்டு தம் இருப்பிடங்களை பறிகொடுத்த மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்தார்கள்.
மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் பிரித்தானிய மற்றும் யூத ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக ஜிஹாத் செய்ய தயாராகுமாறு பிரச்சாரம் செய்தார்.
1930 ஆண்டு பிரித்தானிய மற்றும் யூத ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட “கருப்பு கை” (Black Hand) அமைப்பு அமைக்கப்பட்டதற்கு இவர்களின் பிரசாரங்கள் மிக முக்கியமானது.
அறபு உலகில் தாக்கம் செலுத்திய இந்த தலைவரின் நினைவாகவே பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் தனது இராணுவ படை பிரிவுக்கு “இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணி” என்று பெயரிட்டுள்ளது
இறுதி நேரத்தில் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு எதிராக நிமிர்ந்து நின்று சண்டையிட்டது பாலஸ்தீன வரலாற்றில் ஒரு மாபெரும் வீர செயலாக கருதப்பட்டது.
இன்று அவரது நினைவு நாள் இறைவன் அவரிற்கு உயரிய சுவனத்தை வழங்குவானாக.
எம்.என் முஹம்மத்
Post a Comment