வீதியில் படுத்திருந்த, மாட்டினால் விபரீதம்
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த கன்ரர் ரக வாகனம் பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (19-11-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஓமந்தை வீதியில் படுத்திருந்த மாட்டினை கடப்பதற்கு முற்பட்ட வேளையில் பின்னால் வந்த இ.போ.ச சொந்தமான பஸ் கன்ரர் வாகனத்தை பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவத்தின் போது, கன்ரர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டது.
இதனால் வாகனத்தில் பயணித்த இருவரும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் குறித்த விபத்தில் இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான பேருந்தும் பாரியளவில் சேதமடைந்துள்ளது.
Post a Comment