Header Ads



அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்


இலங்கையர் குடும்பம் ஒன்று அவுஸ்திரேலியாவில் குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசித மற்றும் அவரது மனைவி நிலந்தியால் ஆகியோரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.


தாக்குதலின் போது அவர்களது விசேட தேவையுடைய மகளும் உடனிருந்துள்ளார். இந்த தாக்குதலின் பின்னர் சிறுமி அதிர்ச்சியில் இருப்பதாகவும் துசித குறித்த ஊடகங்களிடம் தெரிவித்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை, பல்லாரட் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், தாக்குதலுக்கு எதிராக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் துசித குற்றம் சுமத்தியுள்ளார்.


மேலும் தாக்குதல் நடந்த இடத்தில் சிசிரீவி கருவிகள் வேலை செய்யவில்லை என பொலிஸ் அதிகாரிகள் அவருக்கு கூறியுள்ளனர்.


ஏறக்குறைய 10 வருடங்களாக மெல்போர்னில் வசிப்பதாகவும், இந்த எதிர்பாராத சம்பவத்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.


இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பல்லாரட் நகரசபை மேயரும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.