Header Ads



அல்லாஹ் உனக்கு செய்யும் பேரருளால்...


அல்லாஹ் உனக்கு செய்யும் பேரருளால், நீ இராக்கால வணக்கசாளியாக இருந்தால் தூங்குபவர்களை துச்சமாக பார்க்காதே...!


நீ பகல் கால நோன்பாளியாக இருந்தால், நோன்பில்லதவர்களை துச்சமாக பார்க்காதே...!

நீ போர்க்களத்தில் அறப்போரளியாக இருந்தால் களம் வராதவர்களை துச்சமாக பார்க்காதே...!

சில சமயம், இரவில் உறங்கும் ஒருவன், பகலில் நோன்பில்லாத ஒருவன், அறப்போரில் கலந்துகொள்ளாத ஒருவன் உன்னை விட அல்லாஹ்விடம் நெருக்கமானவனாக இருக்கலாம்.

நீ இரவெல்லாம் வணங்கிவிட்டு இறுமாப்பு கொள்வதை விட, நீ இரவெல்லாம் உறங்கிவிட்டு மனவருத்தம் கொள்வது எவ்வளவோ பரவாயில்லை!

ஏனெனில் தன்மதிப்பு கொண்டவனின், நல்லறங்கள் எதுவும் மேலுலகம் போகாது!
✍
இமாம் இப்னுல் கையிம்
📖
நூல் / மதாரிஜுஸ் - சாலிஹீன்
✍
தமிழாக்கம் / imran farook


No comments

Powered by Blogger.