அல் அக்ஸா விடயத்தில், அலட்சியம் செய்வோர்...
அல்அக்ஸா விடயத்தில் அலட்சியம் செய்வோர் நிச்சயம் கஃபா, மஸ்ஜிதுல் ஹராம் விடயத்திலும் அலட்சியம் செய்வார்கள். அல்லாஹ் இவ்விரண்டுக்கும் இடையே நிரந்தரமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்.
பலஸ்தீனர்களுக்கு இடையிலான முரண்பாடுகள், அரபிகளின் இயலாமை, இஸ்லாமிய உலகின் பலவீனம், ஐரோப்பிய சமூகத்தின் காலம் கடத்தும் செயற்பாடு, சர்வதேச முக்கியத்துவமற்ற நிலை, அமெரிக்காவின் எல்லையற்ற உதவிகள் என்பன இஸ்ரேலைப் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
எமது பலஸ்தீனிய சகோதரர்களுடன் அடக்குமுறைக்கும், அநீதிக்கும் எதிராக கைகோர்த்து நிற்பது எமது கடமை. இது ஒரு மேலதிகக் கடமையன்று; இது ஒரு அறவழிப்போராட்டம்.
எமது ஸகாத், வக்ஃப், ஸதகாச் சொத்துக்கள் மூலம் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். நாம் பயன்படுத்துவதற்கு சந்தேகமான பணம் இருப்பின் அவற்றையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இஸ்ரேலிய அமெரிக்கப் பொருட்களை பகிஷ்கரிப்பதை நாம் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும்.
குறைந்தபட்சம் அவர்களுக்கு நாம் ஆன்மிக ரீதியாகவாவது உதவ வேண்டும். அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் அவர்களுக்குக் கிட்ட வேண்டும் என நாம் பிரார்த்திக்க வேண்டும். எமக்கிடையிலான முரண்பாடுகளைக் கைவிட்டு ஒரு தடவையாவது நாம் அல்லாஹ்வுக்காக ஒன்றுபட வேண்டும்.
- கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி -
Post a Comment