இஸ்லாமிய அழைப்பாளரின் நூல் காத்தான்குடியில் வெளியீடு
- ரீ.எல்.ஜவ்பர்கான் -
சவூதி அரேபியா ரியாத் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் கே.எம்.அபுல் ஹஸன் மதனி எழுதிய "மரணித்தவரின் ஐந்து சொத்துரிமைகள் ஓரு விளக்கம் " எனும் நூல் அறிமுக விழா நேற்று மாலை காத்தான்குடி இஸ்லாமிக் செண்டர் இல் அதன் தலைவர் ஏ.ஜே.எம்.சுக்ரி தலைமையில் நடைபெற்றது.
காத்தான்குடி மஹ்அதுஸ் ஸுன்னா மகளிர் அறபிக் கல்லூரி அதிபர் அஷ்ஷேய்க் எம்.ஏ.சீ.எம். ஸைனுலாப்தீன் மதனியின் வரவேற்புரையடன் ஆரம்பமான நூல் அறிமுக விழாவில் அஷ்ஷேய்க் எஸ்.எம்.பீ.எம்.அன்ஸார் மதனீ மருதமுனை தாருல் ஹஊதஆ மகளிர் அறபிக் கல்லூரி அதிபர் கலாநிதி எம் எல்.முபாறக் மதனி முபாரக் மதனீ.ஆகியோர் நூல் நயவுரை நிகழ்த்தினர்.
முதல் பிரதியை தொழிலதிபர் ஆதம்பாவா ஹாஜியார் பெற்றுக்கொண்டார்.
சென்ட்.ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ஏ.எல்.எம்.மீரசாகிப் உட்பட பலர் பெற்றுககொண்டனர்.
சிறப்புரையை அஷ் ஷேய்க் ஏ.எல். பீர் முஹம்மத் காஸிமீ நிகழ்த்தினார். பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.
Post a Comment